முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீரர் அபிஜித்திற்கு தெ.ஆ. ஜனாதிபதி பாராட்டு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், ஜூலை. 16 - காமன்வெல்த் செஸ் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர் அபிஜித் குப் தாவிற்கு தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா பாராட்டு தெரிவித் தார். தென் ஆப்பிரிக்காவில் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள கடற்கரை நகர மான போர்ட் எலிசபெத்தில் காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் 23 வயதான இந்தி ய இளம் வீரர் அபிஜித் குப்தா வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார். 

காமன்வெல்த்தில் பட்டம் வென்ற இந் திய வீரர் அபிஜித்திற்கு தங்கப் பதக்கத் தை வழங்கி தெ. ஆ. ஜனாதிபதி கெளர வித்தார். 

இதில் 2-வது இடம் பிடித்த உக்ரைன் வீரர் செர்ஜி பெடோர்சுக்கிற்கு வெள் ளிப் பதக்கம் கிடைத்தது. நெதர்லாந் தைச் சேர்ந்த செர்செய் டிவியாகோவிற் கு வெண்கலம் கிடைத்தது. 

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19-வது காமன்வெல்த் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த 900 -க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந் து கொண்டு சிறப்பித்தனர். 

தென் ஆப்பிரிக்கா ஜனாதிபதி                ஜூமா தெ. ஆ.வின் கிழக்கு லண்டன் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனான கீகன் ரோவுடன் சிறிது நேரம் செஸ் ஆடினார். 

தெ.ஆ.வில் நிறவெறியை எதிர்த்து போராடியதற்காக நெல்சன் மண்டே லா சிறையில் அடைக்கப்பட்டார். அவ ருடன் ஜூமாவும் சிறையில் இருந்தார். அப்போது அவர் செஸ் விளையாடக் கற்றுக் கொண்டார். 

இது குறித்து ஜூமாவிடம் கேட்ட போது, தெ.ஆ. சிறையில் இருந்த போது செஸ் விளையாடக் கற்றுக் கொண்டேன். சிறையில் ஏற்பட்ட தனி மையில் இது எங்களுக்கு நல்ல ஊக்கத் தை அளித்தது. மனம் இதனால் ஒரே சீராக இருந்தது. நிறைவெறிக் கொள் கைக்கு எதிராக போராட முடிந்தது என்றார் அவர். 

மேலும் பள்ளி மாணவர்களுக்கு இடை யே செஸ் போட்டியை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஜனா திபதி ஜூமா கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்