ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கி., அணியில் மாற்றம் இல்லை

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 17 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து வரும் ஆஷஸ் தொடர் 2-வது கிரிக்கெ ட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் இல்லை. கடந்த வாரம் நாட்டிங்ஹாம் நகரில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 14 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

எனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற அதே கூட்டணியை நீடிக்க இங்கிலா ந்து தேர்வுக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கே ல் கிளார்க் தலைமையில் இங்கிலாந்தி ல் சுற்றுப் பயணம் செய்து கேப்டன் அலிஸ்டார் கூக் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான  முத ல் டெஸ்ட் நாட்டிங்ஹாம் நகரில் உள்ள டிரன்ட் பிரிட்ஜில் கடந்த 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடந்தது. 

இந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடி 14 ரன் வித்தியா சத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்து வீச் சாளரான ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.  

ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் 5 விக் கெட்டையும், 2 - வது இன்னிங்சில் 5 விக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட் கைப்பற்றினார். 

இங்கிலாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த சுவிங் கிங்கானஆண்டர்சனை இங்கிலாந்து பத்திரிகை கள் பாராட்டி உள்ளன. 

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில் சிறப் பாக பந்து வீசியதைத் தொடர்ந்து ஆண்டர்சன் ஐ.சி.சி.யின் டெஸ்ட் போட்டி தரவரிசையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார். 7-வது இடத்தில் இருந்த அவர் 6-வது இடத்திற்கு முன் னேறி இருக்கிறார். 

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையி ல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் ஸ்டெயி ன் மற்றும் பிளாண்டர் இருவரும் முத ல் 2 இடத்திலும், இலங்கை வீரர் ஹெ ராத் 3 - வது இடத்திலும் உள்ளனர். 

இந்திய வீரர்களில் முன்னணி சுழற் பந் து வீச்சாளர்களான அஸ்வின் 7-வது இடத்திலும், ஓஜா 11-வது இடத்திலும் உள்ளனர். 

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில் சதம் அடித்த இங்கிலாந்து வீரர் இயான் பெ ல் 5 இடங்கள் முன்னேறி 17-வது இடத் தைப் பிடித்து இருக்கிறார். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ்  தொடர் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 18-ம் தேதி துவங்குகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: