நக்சல் வன்முறைக்கு சத்தீஸ்கரில் 1,181 பேர் பலி..!

புதன்கிழமை, 17 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், ஜூலை. 18 - சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் நக்சல் வன்முறைக்கு போலீசார் உட்பட மொத்தம் 1,181 பேர் பலியாகி இருப்பதாக மாநில உள்துறை அமைச்சர் நங்கிராம் கன்வர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நக்சல் பிரச்சினை உள்ள மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தில் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் நக்சல் வன்முறையில் பலியானோர் விவரங்களை வெளியிட வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினர் குல்தீப் சிங் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு மாநில உள்துறை அமைச்சர் நங்கிராம் கன்வர் எழுத்து மூலமாக அளித்த பதிலில், கடந்த 2008 ஜனவரி முதல் 2013 ஜூன் 20 வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் 3,089 முறை நக்சல்கள் சம்பந்தப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. 

இந்த தாக்குதலில் மொத்தம் 1,181 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் 696 பேர் அப்பாவி பொதுமக்கள். 233 பேர் துணை ராணுவத்தை சேர்ந்தவர்கள். பிஜப்புர மாவட்டத்தில் மட்டும்  392 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 284 பேர் பொதுமக்கள், மற்றவர்கள் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக தண்டேவாடா மாவட்டத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: