எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புர்த்வான், ஜூலை. 18 - மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. இதையடுத்து 21 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் கடந்த 21 ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 11 ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலின் போது பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 15 ம் தேதி புர்த்வான் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள சுமார் 12 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலின் போது பல இடங்களில் குறிப்பாக புர்த்வான் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. வெடிகுண்டுகள் வீசப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரின் கணவர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பல இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன. இதை தொடர்ந்து வன்முறை பரவிய புர்த்வான் மாவட்டத்தில் மொத்தம் 21 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் இன்றைய தினம் வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |