முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆடம்பர திருமணம்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      சினிமா
Image Unavailable

 

நகரி, மே.6 - ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் நடிகருமான என்.டி.ஆரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆருக்கும் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் மகளான லெட்சுமி பிரணதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணம் இன்று அதிகாலை 2.41 மணிக்கு நடந்தது. கடந்த ஒரு மாதமாக திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. ஐதராபாத் அருகே உள்ள மாதாப்பூரில் ரூ.5 கோடி செலவில் திருமண மண்டபமும் திருமண பந்தலும் போடப்பட்டுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் அரசியல் திரையுலக பிரமுகர்கள் 17ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 55 வகை உணவுகளுடன் பரிமாறப்படும் உணவு சமைப்பதற்காக திறமை மிகுந்த சமையல் கலை வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7 மணி முதலே திருமண நிகழ்ச்சிகள் துவங்கின. விடியவிடிய விருந்து நடக்கிறது. தெலுங்கு சம்பிரதாய சடங்குகள் படி திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்காக ஒரு மாதம் படபிடிப்புகளை ரத்து செய்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்