முக்கிய செய்திகள்

சமையல் கேஸ் விலை ரூ.25 அதிகரிக்கும்

Gas Price

 

புதுடெல்லி, மே.6 - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபடியால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை கூடுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் விலை கூடுவதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையில் ரூ 8.50 ம், டீசலில் ரூ.16.76 ம், சமையல் கேஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.330 ம் இழப்பு உண்டாகிறதாம். மொத்தத்தில் கடந்த ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் ஜனவரி மாதத்திற்கு பிறகு பெட்ரோலியப்பொருட்கள் விலை மத்திய அரசால் உயர்த்தப்படவில்லை. அடுத்த வாரம் புதன்கிழமை அனைத்து தேர்தல்களும் முடிவடைகிறது. இதனையடுத்து பெட்ரோலியப்பொருட்களின் விலைகளை உயர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு தலா 5ரூபாய் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.  பெட்ரோல் விலை ரூ.3 அல்லது 4, டீசல் விலை ரூ.5, கேஸ்விலை ரூ.25 முறையே அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர வாய்ப்புள்ளதாக பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: