அமெரிக்காவில் ராஜ்நாத் சிங்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.22 - 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக குஜ்ராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.தேர்தல் பிரச்சார குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவர் ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இது அவரது கட்சி தலைவராக பதவி ஏற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் அமெரிக்க பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவில் நடைபெற உள்ள ஒரு மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அவர், தனது கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பார். இது ராஜ்நாத் சிங் மேற்கொள்ளும் முக்கிய பயணமாக கருதப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டக் சிங் அலுவாலியா ஆகியோரது அமெரிக்க பயணத்திற்கு பிறகு ராஜ்நாத் சிங், அமெரிக்கா சென்றிருப்பதால் இதுஒரு முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் நாளை இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்ற தலைப்பில் ராஜ்நாத் சிங் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: