முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் இருமுறை நிலநடுக்கம்: 50 பேர் பலி

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங்,ஜூலை.23 - சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 50 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தொலைதூரப்பகுதியான மலைப்பகுதியில் உயிருக்கு போராடியவர்களை மீட்க மீட்புப்பணியாளர்கள் பெரும் போராட்டமே நடத்தவேண்டியதாயிற்று.

இந்தநிலநடுக்கங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. ஆயிரத்திற்கும் 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்து தரை மட்டமாயின. இத்தகவலை கண்சூ மாகாண பூகம்ப மைய அதிகாரி தெரிவித்தார். இங்கு தாக்கிய பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆகவும் 5.6 ஆகவும் இருந்தது. 296 பேர் படுகாயம் அடைந்ததாக அவர் தெரிவித்தார். 371 முறை அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். காலை 7.45 மணிக்கு ஒரு முறையும் அதே கண்சூ மாகாணத்தில் காலை 9.12 மணிக்கும் பூகம்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான் கடையில் இருந்தேன். அப்போது கடுமையான அதிர்வுகளை உணர்ந்தேன் என்று மருந்து தயாரிப்பு ஆலையில் பணிபுரியும் ஒருவர் தெரிவித்தார். ஜான் என்ற இடத்தில் 380 கட்டிடங்கள் தரைமட்டமாயின. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. சீனாவிலும் ஜப்பானிலும் நிலநடுக்கம் என்பது சர்வசாதாரணமாக நடக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்