ஸ்பெக்ட்ரம் வழக்கு: அனில் அம்பானி - மனைவி மனு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

டெல்லி,ஜூலை.23 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாட்சியமளிக்க சம்மன் அனுப்பியதை எதிர்த்து தொழிலதிபர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ரிலையன்ஸுக்கு சொந்தமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அலைக்கற்றை பெற்றனர் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா ஆகியோர் சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்திருந்தது. இதனடிப்படையில் இருவரையும் சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த சம்மனை எதிர்த்து அனில் அம்பானியும் டினா அம்பானியும் இன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம். இம்மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெற இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: