முல்லைப் பெரியாறு வழக்கில் இன்று இறுதி விசாரணை

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

டெல்லி,ஜூலை.23 - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை. ஆனால் 142 அடியாக உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு வழக்கு தொடர்ந்தது.

இதில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்தபோதிலும் அதனை பின்பற்றாமலிருக்க தனிச்சட்டத்தை கேரளா நிறைவேற்றியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறிைடு செய்தது. இதனால் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அதிகாரமளித்தல் குழுவை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அமைத்தது. முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்த இந்த குழு, உச்சநீதிமன்றத்தில் கடந்தாண்டு அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: