மோடிக்கு விசா கிடைக்க ராஜ்நாத் சிங் முயற்சி

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

நியூயார்க்,ஜூலை.23 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடையை நீக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மும்முரம் காட்டி வருகிறார். 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராஜ்நாத்சிங் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நரேந்திர மோடி குஜராத் மாநிலத்துக்கான தலைவர் மட்டுமல்ல.. தெற்கே தமிழ்நாடு முதல் வடக்கே வரை, கிழக்கே முதல் மேற்கே வரை இந்திய மாநிலங்கள் அனைத்தும் போற்றக் கூடிய ஒரு தலைவர் நரேந்திர மோடி. அவரது இந்த ஆளுமையானது 2014 லோக்சபா தேர்தலில் கை கொடுக்கும்.

மோடிக்கு அமெரிக்கா விதித்திருக்கும் பயணத் தடையை நீக்க வேண்டும் என விரும்புகிறோம். மோடிக்கு அமெரிக்கா விசா வழங்குவது தொடர்பாக இந்நாட்டு எம்.பி.க்களிடம் வலியுறுத்த உள்ளேன் என்றார். குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைகளால் மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: