முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தகயா வெடிகுண்டு டைமர் கருவி குஜராத்தில் தயாரிப்பு

புதன்கிழமை, 24 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.25 - புத்தகயாவில் பயன்படுத்திய வெடிகுண்டு டைமர் கருவி, குஜராத்தில் உள்ள ராஜ்காட் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க புத்தகயாவில் கடந்த 7-ம் தேதி தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு வெடித்தனர். இதில் புத்த சாமியார் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. குண்டுவெடித்த இடத்தில் வெடிக்காத குண்டுகள் பல வைக்கப்பட்டிருந்தன. இந்த வெடிகுண்டுகளுடன் டைமர் கருவிகள் மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இவைகள் எங்கு வாங்கப்பட்டிருந்தன என்பதை புலனாய்வு அமைப்பினர் விசாரித்தனர். இதில் கியாஸ் சிலிண்டர்கள், பீகார் மாநிலத்தில் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. டைமர் கருவிகள், அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஒரு கடையில் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த டைமர் கருவிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கம் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் மியாமர் நாட்டில் உள்ள ராக்கின் மாகாணத்தில் முஸ்லீம்களுக்கும் புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது முஸ்லீம்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு புத்த துருவிகளை வழிவாங்குவதற்காக மியான்மர் நாட்டில் உள்ள முஸ்லீம்களின் பிரிவு இந்த குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்