முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சட்ட திருத்தம்: முதல்வருக்கு பிரதமர் பதில் கடிதம்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. 26 - இலங்கை அரசமைப்பு சட்டத்தின் 13 வது திருத்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கும் வரையில் நம்முடைய பணி தொடரும் என்றும் இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 14.7.2013 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அதில் இலங்கை அரசமைப்பு சட்டத்தின் 13 வது திருத்தத்தை எந்த வகையிலும் ரத்து செய்வதற்கு அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்கு இலங்கை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க மத்திய அரசு சாத்தியமான

அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தார்.    

இலங்கையில் வாழும் தமிழர்கள் எந்தவித பாதிப்பிற்கும் உள்ளாகாமல் இன்றியமையாத அவர்களுடைய ஜனநாயக உரிமை பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். இவ்வாறு செய்வது, இலங்கையிலுள்ள தமிழர்கள் சட்ட ரீதியான உரிமைகளை பெற்றிருப்பதாகக் கருத இயலும் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.   

இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக காட்டப்பட்டு வரும் வேறுபாடுகளையும், அவர்களுடைய நீண்டநாளைய குறைபாடுகளையும் களைந்து அவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு உறுதியான, தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். 

முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் 16.7.2013 ஆம் நாளிட்ட கடிதத்தில் பதிலளித்துள்ளார்.  அதன் 

சாராம்சம் வருமாறு:  

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தம் தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படவேண்டிய சாத்தியமான மாற்றங்கள் குறித்த தங்களுடைய 14.7.2013 ஆம் நாளிட்ட கடிதத்திற்கு நன்றி.  இலங்கையில் அரசியல் அதிகாரங்களை ஒருங்கிணைப்பது மற்றும் தன்னாட்சி உரிமை அளிப்பது குறித்த பிரச்சினையில் மத்திய அரசின் நிலையில் 

எந்த ஒரு மாற்றமும் இல்லை. இலங்கையில் எல்லா சமுதாயத்தினரும் குறிப்பாக, இலங்கைவாழ் தமிழர்கள் அங்கு ஒருங்கிணைந்து வாழும் வகையில் அவர்களுக்கு தலைமைப் பொறுப்பை அளித்து, ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே நம்முடைய நாட்பட்ட கோரிக்கையாகும்.  இலங்கை வாழ் தமிழர்களுக்கு இத்தகைய தன்னாட்சி உரிமை அளிக்கும் வரையில் நம்முடைய பணி தொடரும். இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்