ஒபாமாவின் செல்வாக்கு அதிகரிப்பு

obarack 0

வாஷிங்டன்,மே.6 - வாக்குறுதி அளித்தபடி வரிகளை குறைக்கவில்லை, வசதியை பெருக்கவில்லை. வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவில்லை. பொருளாதார சரிவில் இருந்து நாட்டை காப்பாற்றவில்லை என்றெல்லாம் அதிபர் ஒபாமா மீது அதிருப்தியில் இருந்த அமெரிக்கர்கள் பின்லேடனை கொன்றதன் மூலம் தற்போது ஒபாமாவுக்கு தங்களது ஆதரவை அள்ளித்தர ஆரம்பித்துள்ளனர். 

இது நீடிக்குமா, அடுத்த முறையும் அதிபராக இது போதுமா என்றெல்லாம் இப்போது ஆராய வேண்டும். இந்த நாளில் அவர் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. யு.எஸ்.ஏ. டுடே நடத்திய கருத்துக் கணிப்பின்படி பின்லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது. சரியான செயல் என்று 90 சதவீத அமெரிக்கர்கள் கூறுகின்றனர். இது மிக முக்கியமான நடவடிக்கை என்று 79 சதவீத அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். 

பின்லேடன் கொல்லப்பட்டதை தாங்கள் அங்கீகரித்திருப்பதாக 98 சதவீத அமெரிக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்த போது கடந்த 2001 ல் நடத்திய இதே போன்ற கருத்து கணிப்பினஅ போது 90 சதவீத அமெரிக்கர்கள் அதை ஆதரித்துள்ளனர். 

1991 ல் வளைகுடா போரில் அமெரிக்கா இறங்கிய போதும், 2001 ல் ஈராக் மீது படையெடுத்த போதும் கூட சுமார் 70 சதவீத அமெரிக்கர்கள்தான் ஆதரவு தெரிவித்தனர். இந்த முறை இது 90 சதவீதத்திற்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்லேடனை கண்டுபிடித்து கொலை செய்ததில் முக்கிய பங்கு அமெரிக்க ராணுவத்துக்கும், சி.ஏஐவுக்கும் தான் அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அதிபரை விட அந்த இரு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் பெரும் பங்கு ஒபாமாவுக்குத்தான் என்கிறவர்கள் 35 சதவீதம் பேர்தான். ஓரளவுக்கு அவருக்கு பங்கு என்கிறவர்கள் 36 சதவீதம். பங்கு அதிகமில்லை என்கிறவர்கள் 25 சதவீதம்பேர்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ