உடுமலைபேட்டையில் இன்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Jaya1 0

 

சென்னை, பிப்.23 - நிலமோசடிக்கு காரணமான மைனாரிட்டி தி.மு.க. நகராட்சி தலைவரின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில்  உடுமலைப்பேட்டையில் இன்று (23.2.11) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து என அராஜகங்களில் ஈடுபடுகின்ற திமுக​வினர் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களாக இருப்பதன் காரணமாக, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. திருப்nullர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியை எடுத்துக் கொண்டால், இந்த நகராட்சியின் தலைவராக இருக்கும் திமுக​வைச் சேர்ந்தவர் நில மோசடிக்கு பெயர் பெற்றவர். இக்காவல் துறை துணைக் கண்காணிப்பாளரை அவரது அலுவலகத்திலேயே தாக்கியவர்.  இப்படிப்பட்ட நபர் மக்களுக்கு நன்மை செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?  இவருடைய செயல்களுக்கு ஊக்கமளிக்கும் அரசாக மைனாரிட்டி தி.மு.க. அரசு விளங்குகிறது. எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட உடுமலை மூணார் ரயில்வே மேம்பாலம் திட்டம், தற்போதைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கும், ரயில்வே துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததன் காரணமாக மேற்படி சாலை தற்போது மூடப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளதாகவும், இந்த மாற்றுப் பாதையும் தற்போது பழுதடைந்து விட்டதால் போக்குவரத்தே முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், பேருந்து நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் 60 ஆண்டு காலமாக வசித்து வந்த ஏழை மக்களை விரட்டிவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்தப் பணியையும் மைனாரிட்டி தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும், மேற்படி இடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிப்பதாகவும் நகராட்சிக்கு சொந்தமான பல இடங்களை திமுக​வினர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், உடுமலைப்பேட்டை பழனி பாதையில் பைபாஸ் ரோடு அமைக்க  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது குடிnullர்த் திட்டம் செயல் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டதாகவும், கழிவுnullர் கால்வாய் பராமரிப்பின்மை காரணமாக நகராட்சி முழுவதும் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகவும், பாதாள சாக்கடைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதன் காரணமாக கொசுத் தொல்லையினால் மக்கள் அவதிப்படுவதாகவும், 100 அடி திட்ட சாலைப் பணிகள் துவங்கப்படாததன் காரணமாக அந்த இடங்களை தனியார் ஆக்கிரமித்து உள்ளதாகவும் புகார்கள் வருகின்றன.  சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மக்கள் நலப் பணிகள் எதுவுமே நடைபெறாத ஊழல் நிர்வாகமாக உடுமலைப்பேட்டை நகராட்சி நிர்வாகம் விளங்குகிறது. 

எனவே, திருப்nullர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியில் தலைவிரித்து ஆடும் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டிற்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், திருப்nullர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று (23.2.2011 புதன் கிழமை) மாலை 4 மணியளவில், உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்,  தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ., தலைமையிலும், திருப்nullர் மாவட்ட செயலாளர்  சி. சண்முகவேலு, எம்.எல்.ஏ., கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்  செ.ம. வேலுசாமி, எம்.எல்.ஏ., திருப்nullர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருப்nullர் சி. சிவசாமி, பொள்ளாச்சி தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினர்  கே. சுகுமார், அவினாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். பிரேமா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருப்nullர் மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும்,  உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.     

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: