முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் ரோந்துப் பணிகளை தடுக்கும் சீன ராணுவம்

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.6 - இந்திய எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ள ராணுவ காவல் முகாம் வீரர்களைப் பாதுகாப்பு ரோந்துப் பணிகளில் ஈடுபடவிடாமல்  சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர் என்று தெரிய வந்துள்ளது. லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினரின் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளைத் தடுத்து வருகின்றனர். 

இந்திய எல்லைக் கட்டுப்பாடுக் கோடு அருகே வடக்கு லடாக்கில் உள்ள வர்த்தக சந்திப்பு என்று அறியப்படும்  பகுதியில் சீன ராணுவத்தின் இந்த அத்துமீறல்கள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள மலை உச்சியில் இரண்டு இடங்களில் திரங்கா என்ற ரோந்து நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த வாரம் தொடங்கியது.

இந்த ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதிகளில் இலகு மற்றும் கன ரக வாகனங்களில் வந்த சீன ராணுவத்தினர்  ரோந்து நடவடிக்கைகளை முடக்கினர். 

அந்த இடம் சீனாவின் ஒரு பகுதி என்று தெரிவிக்கும் அறிவிப்பு பலகையை சீன ராணுவத்தினர் சுட்டிக்காட்டினர் என்றும் அதற்கும் அப்பால் இந்தியா எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டனர் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பகுதிகளில் உள்ள முகாம்களில் 21 முறை பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். சீன ராணுவம் அங்கு ஒரு கண்காணிப்பு முகாம் அமைத்திருப்பதாகவும் இந்திய வீரர்கள் அங்கு ரோந்துக்குப் புறப்பட்டதும்  அவர்கள் பாதி வழியிலேயே தடுத்து நிறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்திய -சீன எல்லைப் பகுதியில் சீனா அமைத்து வரும் ஒரு கோபுரத்தை அகற்ற வேண்டும் என்று இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. 1993-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில்  இந்த கோபுரத்தை எழுப்பக் கூடாது என்று சுட்டிக்காட்டப்பட்டது.பல்வேறு தருணங்களில் இந்திய எல்லைப்  பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவி வருவதை இரு தரப்பு கூட்டத்தில் இந்திய ராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டு வந்துள்ளனர். 

சில முறை 100 மீட்டர் சீனர்கள் அத்து மீறி வந்துள்ளனர். ஜூலை மாதம் 17-ம் தேதி 2.5 கி.மீ. தூரமும், 25-ம் தேதி 3.5 கி.மீ. தூரமும் வந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்