முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவம் தாக்கியதில் 5 பேர் பலி: பிரதமரிடம் விளக்கம்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.8 - ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி அந்தோனி கூறிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி விளக்கமளித்தார். பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் இந்திய வீரர்கள் 5 பேர் இறந்தனர். இதுபற்றி நாடாளுமன்றத்தில் அந்தோனி பேசும்போது, பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் இறந்தனர் என்று தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தினர்தான் சுட்டனர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அந்தோனியை கடுமையாகச் சாடினர். அவர் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வக்காலத்து வாங்குவதாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இதை அந்தோனி மறுத்தார். எனக்குக் கிடைத்த தகவல்களை மட்டுமே நான் தெரிவித்தேன் என்று அவர் கூறினார். இதையடுத்து அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அப்போது அவர் பிரதமரிடம். எனக்குக் கிடைத்த தகவல்களை மட்டும் நான் தெரிவித்தேன் என்றார். அந்தோனியின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அவர் அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப் ணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 20 பேர் தாக்கியதில இந்திய  ராணுவ வீரர்கள் 5 பேர் இறந்தனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவ சீருடையில் வந்து தாக்கினர்.  இதில் 5 பேர் இறந்தனர். ஒருவர் காயமடைந்தார் என்றார். இது இரு அவைகளிலும் பெரும் புயலைக் கிளப்பியது. இவரது பேச்சுக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

பாஜக எம்.பி. சுஸ்மாசுவராஜ் பேசும்போது அந்தோனியை கடுமையாகச் சாடினார். இதுபோல் ராஜ்ய சபையில் அந்தோனி பேசும்போது, எனக்குக் கிடைத்த தகவலை தெரிவிக்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவ தளபதி சென்று வந்த பிறகு நான் விளக்கம் தருகிறேன் என்றார் அந்தோனி. இதை இரு அவைகளிலும் உறுப்பினர்கள் ஏற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்