முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்விப் பாதையில் அல்கொய்தா: ஒபாமா

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக. 10 - பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா தோல்விப் பாதையை நோக்கிச் சென்று கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனாலும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக சண்டையிடுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

கலிபோர்னியாவில் பென்டெல்டன் முகாமில் 3 ஆயிரம் கடற்படை வீரர்கள் மத்தியில் பேசிய ஒபாமா மேலும் கூறியதாவது,

அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அழிக்கப்பட்டனர். ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அல்-காய்தா இயக்கம் தோல்விப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆப்கனில் அமெரிக்க படையினர் பாதுகாப்பில் ்ஈடுபட்ட பின், அங்கு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை பெற்றுள்ளனர். அவர்களின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

ஆப்கனில் போர் முடிந்த பின்னால், அமெரிக்காவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என்று எண்ணக் கூடாது. முன்னரே கூறியது போல், அல்கொய்தா தலைவர்களை அழித்து விட்டாலும், வேறு பயங்கரவாத அமைப்புகளினால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் உள்ளது. மற்ற நாடுகளில் உள்ள நமது தூதரக அலுவலர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் இன்றளவும் அச்சுறுத்தப்பட்டே வருகின்றனர். இந்த அச்சுறுத்தல்களை சவால்களாக எடுத்துக் கொண்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட வேண்டும். சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு இதனை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்