முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பேட்மிண்டன்: இந்திய வீராங்கனைக்கு பதக்கம்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

குவாங்ஜூ, ஆக. 11 - சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனையான பி.வி. சிந்து வெண்கலப் பதக்க த்தை கைப்பற்றினார். பரபரப்பாக நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் சிந்து தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக்கிடம் போராடி தோல்வி அடைந்தார். 

இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத் திரமான சிந்து பங்கேற்ற முதல் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இதுவாகும். முதல்  போட்டியிலே யே அவர் வெண்கலம் வென்றது பா ராட்டத்தக்கது. 

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள குவாங்ஜூ நகரில் கடந்த ஓரு வார காலமாக வெ கு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இது தற்போது அரை இறுதி க் கட்டத்தை அடைந்துள்ளது. 

உலக பேட்மிண்டன் போட்டியில் பங் கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்று ம் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனை பி. வி. சிந்துவும் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இந்தானானும் மோதினர். 

இந்தப் போட்டியில் தாய்லாந்து வீரா ங்கனை சிறப்பாக ஆடி 10 -21, 13 -21 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற தாய்லாந்து வீராங்கனை 3-ம் நிலை வீராங்கனையாவார். இதில் தோல்வி அடைந்த சிந்து 12-ம் நிலை வீராங்க னையாவார். 

சிந்து அரை இறுதிக்கு முந்தையை சுற் றில் சீனாவைச் சேர்ந்த முன்னணி வீரா ங்கனைகள் இருவரை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தார். இந்தப் போட்டி சுமார் 35 நிமிடத்தில் முடிவு க்கு வந்தது. 

இந்தப் போட்டியில் தாய்லாந்து வீரா ங்கனை நேர்த்தியான ஆட்டத்தை வெ ளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகள் பெ ற்று முன்னேறினார். சிந்து செய்த தவறு களே அவரது தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இந் த வருடம் இந்திய ஓபன் மற்றும் தாய்லாந்து ஓபன் பட்டங்களை வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தவிர, 3 முறை உலக ஜூனியர் போட்டியில்தங்கம் வென்று சாதனை படை த்தவர். 2010 0- ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் வெள் ளிப் பதக்கம் வென்றதும் நினைவு கூறத் தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்