முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மட்டக்களப்பு கோவிலில் பக்தி பாடல் ஒலிபரப்பத் தடை

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

மட்டக்களப்பு, ஆக.12 - மட்டக்களப்பு சிவன் கோவிலில், பக்தி பாடல்களை  ஒலிபரப்ப சிங்கள ராணுவம் தடை வித்துத்துள்ளது. இலங்கை போருக்குப் பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்தது. மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும், தமிழினத்தை ஒடுக்கும் செயல்களில் சிங்கள ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

 இந்நிலையில் கிழக்கு இலங்கையில், மட்டக்களப்பு நகரில் உள்ள சிவன் கோவிலில்  பக்திப் பாடலை ஒலிபரப்ப சிங்கள ராணுவ வீரர்கள்  தடை விதித்துள்ளனர். அந்தப் பாடலை தமிழ்க் கவிஞர் புதுவை ரத்தின துரை இயற்றியுள்ளார். அவருக்கு விடுதலைப் புலிகள் மீது பரிவு உண்டு. ஆகவேதான் அந்த பாடலை ஒலிபரப்பக் கூடாதென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

போர் முடிந்த சமயத்தில் கவிஞர் புதுவை ரத்தின துரையையும். சிங்கள ராணுவ வீரர்கள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கையில் புகழ்பெற்ற கோவில்களில் குடிகொண்டுள்ள கடவுள்களைப் பற்றியும்,  பக்திப் பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல்கள் யாவும் கோபுர வாசல் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்