முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா பதிலடி: கடும்சண்டை

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு ஆக 13  -  எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே உள்ள முன்னணி இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 3 நாட்களாகவே தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 

 போர் நிறுத்த ஒப்பந்தத்தை 5-வது முறையாக மீறி ராக்கெட் வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் ஆகியவற்றின் மூலம் தாக்குதல் நடத்தினர். பொறுத்து,பொறுத்து பார்த்த இந்திய ராணுவம் அவர்களுக்கு நேற்று தக்க பதிலடி கொடுத்தது. இதையடுத்து இரு தரப்பிலும் கடும் துப்பாக்கி சண்டை மூன்டது. நேற்று அதிகாலை 1.50 மணியளவில் பாகிஸ்தான் படையினர் கண்மூடி தனமாக சுடஆரம்பித்தார்கள். இந்திய நிலைகள் மீது அவர்கள் தாக்கிய தாக ராணுவ அதிகாரி தெரிவித்தார். இது பாகிஸ்தானின் மற்றொரு போர் நிறுத்த ஒப்பந்த மீறலாகும் என்று கூறிய அவர் துப்பாக்கி சூடு காலை 6 மணிவரை நீடித்ததாக குறிப்பிட்டார். அதிர்ஷடவசமாக உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்றும் அதிகாரி ஆச்சாரியா கூறினார். துர்கா பட்டாலியன் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் 11 நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் 5 இந்திய வீரர்கள் பலியானார்கள். மறுநாள் நடந்த தாக்குதலில் ஒரு வீரர் காயமடைந்தார். இப்படி தொடர்ந்து பாகிஸ்தான் அட்டூழியம் செய்து வருகிறது. இதனால் இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்