முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மீண்டும் அட்டாக் அமெரிக்க தாக்குதலில் 12 தீவிரவாதிகள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், மே. - 8  - பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 12 தீவிரவாதிகள் பலியானார்கள். தவிர, முல்லா உமர் மற்றும் அல் ஜவ ஹிரி ஆகியோருக்கும் குறி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது பற்றிய விபரம் வருமாறு -  பகிபாகிஸ்தானின் கடும் எதிர்ப்பையும் மீறி வஜ்ரிஸ்தான் பகுதியில், உள்ல தத்தாகெல் பகுதியில், அமெரிக்க ராணுவர் ஆளில்லா போர் விமானம் (ட்ரோன்) தாக்குதலை நேற்று முன் தினம் நடத்தியது.
இதில் 12 தீவிரவாதிகள் பலியாயினர்.
அதே நேரத்தில், ஏமனிலும், அல்கொய்தாவை குறிவைத்து அமெரிக்க ராணுவரம் நேற்று முன் தினம் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியது. தீவிரவாத அமைப்பின் முக்கியதலைவர்களான முல்லா உமர், அல் ஜவஹரி மற்றும் அன்வர் அல்லகி ஆகியோரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்கொய்தா தலைவரும் இரட்டை கோபுர தாக்குதலின் முக்கிய குற்றவாளியுமான, ஒசாமா பின்லேடனை அமெரிக்க படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் அபோதாபாத் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த பின்லேடனை கடந்த 1 -ம் தேதி அமெரிக்க படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர்.
அபோதாபாத் பகுதியில் பின்லேடன் மாளிக்கைக்கு அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்து பின்லேடன் பற்றிய தகவல்களை அமெரிக் க உளவுப் படையினர் (சி.ஐ.ஏ.) சேகரித்துஅனுப்பி உள்ளனர். அதன் அடி ப்படையில் பின்லேடனை சுட்டுக் கொல்லும் ஆபரேசனை மெரிக்க படை வெற்றிகரமாக முடித்துள்ளது.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது மகிழ்ச்சி தான் என்றாலும், எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் எங்கல் நடாட்டு எல்லையில், அமெரிக்க ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது இறையாண்மைக்கு எதிரான செயல் எந்று பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது.
இனிமேல் இது போன்ற தாக்குதல் நடத்த அனுமதிக்காது எனவும் எச்சரித்தது. பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க உளவுத் துறையினர் மற்றும் ராணுவத்தினரிந் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும்படியும் தெரிவித்தது.
பாகிஸ்தானின் அஎச்சரிக்கையை அமெரிக்க ராணுவம் கண்டுகொள்ளவில்லை. தகவல் தெரிவிக்காமல் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சிற்கே இடமில்லை என அமெரிக்க திட்டவட்டமாக கூறிவிட்டது.
அதே நேரத்தில் பாகிஸ்தானில் இன்னும் தீவிரவாதிகள் பதுங்கி இருப் பது தெரிந்தால்,மீண்டும் தாக்குதல்ந டத்துவோம் என்றும் அறிவித்த து. இந்நிலையில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை அமெரி க்க ராணுவம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தீவிரவாத அமைப்பில் 2 -ம் நிலையில் உள்ள முக்கிய தலைவர்களை குறிவைத்து அடுத்தகட்டதாக்குதலைதொடங்கியுள்ளது. அல்கொய்தா அமைப்பில் பின்லேடனுக்கு அடுத்த நிலையில் உள்ள அல் ஜவஹிரி, தலிபான் அமைப்பின் முல்லா உமர் போன்ற தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக அமெரிக்ககருதுகிறது.
இதனால் வஜ்ரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகசந்தேகப்படும் எல்லா இடங்களையும் ட்ரோன் கள் (ஆல் இல்லா விமனம்) மூலம் குண்டு வீசி அழிக்கிறது அமெரிக்கா.
அஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் வஜ்ரிஸ் தானின் தத்தாகெல் பகுதியில் நேற்று முன்தினம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள் 12 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க - பாகிஸ்தாந் உறவில் மேலும் விரிசல் ஏற்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்