முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவத்தினர் 50 பேரை கொல்ல வேண்டும்

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 10 - பிரபல யோகா குரு ராம் தேவ் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பாகிஸ்தான் ராணுவம் நமது எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து 5 பேரை கொன்று விட்டு போன பிறகும் மத்திய அரசு மிகவும் பொறுமையாக உள்ளது. ''கண்ணுக்கு கண்'' என்ற ரீதியில் மத்திய அரசு பதிலடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

5 வீரர்களை இழந்ததற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 50 வீரர்களையாவது நாம் சுட்டு கொன்றிருக்க வேண்டும். அதை செய்த பிறகு ''இதுதான் எங்கள் பதில்'' என்று காங்கிரஸ் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சொல்லி இருக்கலாம்.

அதை விட்டு விட்டு காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அறிக்கை விடுவதால் எந்த பலனும் இல்லை. மத்திய அரசு இப்படி கோழைத்தனமாக இருப்பதால் நமது நாட்டின் மானம், மரியாதை, கவுரவம் போன்றவற்றுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை விடாமல், வாய் சவடால் காட்டாமல் ஏதாவது நடவடிக்கையில் ்ஈடுபடுவது நல்லது.

தற்போதைய மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுவதில் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. இவர்களால் நமது நாட்டின் மரியாதை, கவுரவத்தை பாதுகாக்க முடியாது. மத்திய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி இந்த விஷயத்தில் மாறி, மாறி பல்டி அடித்து அறிக்கை விடுகிறார். இது நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் கேள்விக் குறியை ஏற்படுத்தி விடும். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இந்தியாவுக்கு அனு கூலமாக எப்போதும் இருந்த தில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறார்கள். இந்த போக்கை காங்கிரஸ் தலைவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராம்தேவ் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்