11-வது ஐந்தாண்டு திட்டத்தில் பூடானுக்கு நிதி: இந்தியா உறுதி

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

திம்பு,ஆக.17 - 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பூடான் வளர்ச்சிக்கு உதவி செய்யப்படும் என்று அந்த நாட்டுக்கு இந்தியா உறுதி அளித்துள்ளது. சீனா மாதிரி அண்டை நாடுகளையும் சிறு சிறு நாடுகளையும் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்யாமல் இந்தியா அவைகளின் இறையாண்மையை மதித்து நடக்கிறது. அண்டை நாடுகளான நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய நாடுகள் சிறு சிறு நாடுகளாக இருந்தாலும் அந்த நாடுகளின் இறையாண்மையை மதித்து அவைகளுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. பூடான் நாட்டு பிரதமர் தஷெரிங் டாப்கேயை இந்தியா உயரதிகாரி பி.எஸ். ராகவன் தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்டக்குழு நேற்றுக்காலையில் சந்தித்து பேசியது. அப்போது வரும் 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் பூடான் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்படும். பூடானின் வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைபெற இந்தியா அனைத்து வகைகளிலும் உதவி செய்யும் என்று உறுதி அளிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராகவன், திட்டங்களை செயல்படுத்தும்போது அதன் பலன்கள் விரைவில் கிடைக்க செய்ய வேண்டும. இந்தியா அளிக்கும் உதவிகள் நல்ல முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிய தனி நபர்கள் மற்றும் திட்டக்கமிஷனுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்திய குழுவினருக்கு பூடான் பிரதமர் தாப்காய் நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த மாதிரி இருநாட்டு பிரதிநிதிகளும் அடிக்கடி சென்று வர வேண்டும் என்றும் தெரிவித்தார். 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய இந்தியா சம்மதித்து இருப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பூடான் பிரதமர் தாப்காய் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: