பிலிப்பைன்ஸில் கப்பல்கள் மோதல்: 26 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

செபு, பிலிப்பைன்ஸ், ஆக.18 - பிலிப்பைன்ஸ் நாட்டுக் கடலில், செபு துறைமுகம் அருகே சரக்கு கப்பலுடன் பயணிகள் கப்பல் மோதி மூழ்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். 200 பேரைக் காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. கடலில் தத்தளித்தவர்தளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 870 பயணிகளுடன், புனித தாமஸ் அகுய்னா என்ற கப்பல் சென்றது. அப்போது அங்கு வந்த சரக்குக் கப்பலுடன் செபு துறைமுகம் அருகே பயணிகள்  கப்பல் மோதியது. 

சனிக்கிழமை காலையில் 215 பேர் மீட்கப்பட்டனர். கடலோர காவல் படையின் தலைமையிடமான மணிலாவிலிருந்து வரும் செய்திகள் இதைத் தெரிவித்தன.

 கப்பல் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. திடீரென கப்பல் மூழ்கியதால் கப்பலிலிருந்து ஏதோ ஒரு அபாயகரமன கூக்குரல் வந்தது. உடனே நான் கடலில் உயிர் காக்கும் மதவை மூலம் கடலில் குதித்தேன். திடீரென கடலுக்குள் இழுத்துச் செல்வதாக உணர்ந்தேன். எனது தாயாரை தள்ளியதாக எனது சகோதரி கூறினார். ஆயினும் அவர்கள் பிரிந்து விட்டனர். எனது சகோதரிக்கு நீச்சல் தெரியும் எனவே அவர் நீந்தி பிழைத்துக்கொண்டார். எனது தாயாருக்கு நீச்சல் தெரியாது எனவே அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை என்று தப்பிப் பிழைத்த ஆர்வின் மனோலா என்பவர் தெரிவித்தார்.

கடற்கரையிலிருந்து 3 அல்லது 4 கி.மீ. தூரத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கப்பலில் 58 குழந்தைகளும் பயணம் செய்துள்ளனர். இவர்களில் எத்தனை பேர் பிழைத்துள்ளனர் அல்லது மீட்கப்பட்டனர் என்பது தெரியவில்லை. இவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவர்களில் சிலரை மீனவர்கள் மீட்டிருக்கலாம் என்று நம்புவதாகவும், இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்என்றும் கப்பலுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்றும் கடற்படை அதிகாரி லூயுஸ் டாவ்சன் தெரிவித்தார்.

இறந்கவர்களைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. நான் 15 பேரை காப்பாற்றினேன் என்றும், தங்களை காப்பாற்றுமாறு பலர் கூக்குரலிட்டதாகவும், கப்பல் மூழ்கியபோது பலர் தூங்கிக்கொண்டிருந்தனர் என்றும்  மீனவர் ஒருவர் தெரிவித்தார். இந்த கப்பல் துறைமுகம் நோக்கி சென்றுபோது, விபத்து ஏற்பட்டது என்றும், சரக்கு கப்பலுடன் மோதிய 30 நிமிடத்துக்குள் கப்பல் மூழ்கியது என்றும் ரசேல் கபுனா என்பவர் தெரிவித்தார். சரக்குக் கப்பலில் 36 பேர்  இருந்தனர். இது மூழ்கவில்லை. மூழ்கிய பயணிகள் கப்பல் கேப்டனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. புயல், மோசமான வானிலை இருந்தது. சரியான பராமரிப்பு இல்லை என்றும் இதனால் விபத்து ஏற்படுகிறது என்றும்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: