முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ்: அதிபன் - நகமுரா 3-வது சுற்றில் மோதல்

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 18 -  உலகக் கோப்பை சதுரங்கப் போட்டி யில் இந்திய வீரர் சசிகிரணின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மற்றொரு வீரரான அதிபன் அமெரிக்க வீரர் நகமுராவை 3-வது சுற்றில் சந்திக்கிறார். உலகக் கோப்பை செஸ் போட்டியின் 2-வது சுற்றில் இந்திய வீரர் சசிகிரண் ரஷ் ய வீரர் செர்ஜே கர்ஜாகினுடன் மோதினார். 

இதன் ரேபிட் பிரிவில் நடந்த டைபிரே க்கரில் சசிகிரண் ரஷ்ய வீரரிடம் தோல் வி அடைந்ததால் போட்டியில் இருந்து வெளியேறினார். 

முன்னதாக நடந்த முதல் சுற்றில் சசிகி ரண் கறுப்புக் காய்களுடன் ஆடினார். முதலில் நன்றாக ஆட்டத்தை துவக்கிய சசிகிரண் பாதியில் தடுமாறி தோல்வி அடைந்தார். 

பின்பு நடந்த மறு ஆட்டத்தில் ரஷ்ய வீரர் கர்ஜாகின் சுதாரிப்பாக ஆடி ஆட்டத்தை டிரா செய்தார். இதன் மூலம் அவர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 

ரஷ்ய வீரர் உலக தரவரிசையில் 9-ம் நிலை வீரராவார். 

இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களில் தரவரிசையில் முன்னணியில் உள்ள சசிகிரண் 2-வது சுற்றில் தோற்ற து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து ள்ளது. 

மற்றொரு இந்திய வீரரான அதிபன் முதல் சுற்றில் ரஷ்ய வீரர் அலெக்சீவை யும், 2-வது சுற்றில் பிரேசில் வீரர் அலெ க்சாண்டர் பியரையும் தோற்கடித்து இருந்தார். 

அடுத்து நடக்க இருக்கும் 3-வது சுற்றில் இந்திய வீரர் அதிபன் அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவை சந்திக்க இருக்கிறார். 

உலக செஸ் போட்டியில் இந்திய வீரர் அதிபன் ஒருவர் மட்டுமே நீடித்து வரு கிறார். தேசிய சாம்பியனான ஜி. ஆகா ஷ் மற்றும் கிராண்ட் மாஸ்டர் பரிமர்ஜ ன் நெகி ஆகியோர் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினர். 

உலக செஸ் போட்டியில் எதிர்பாராத வெற்றியும் தோல்வியும் ஏற்பட்டு வரு கிறது. உலக முன்னாள் சாம்பியனான ருஸ்லான் ரஷ்ய இளம் வீரரான டுபோ விடம் தோற்றார். 

அதே போல மற்றொரு ஆட்டத்தில் செக். குடியரசு வீரரான டேவிட் நவாரா வை மற்றொரு இளம் வீரரான ஜான் லுட்விக் ஹேமர் தோற்கடித்தார். 

மொத்தம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாகக் கொண்ட இந்தப் போட்டியில் 128 வீரர் கள் ஆடத் துவங்கினர். தற்போது 32 வீர ர்களே ஆடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்