முதல்வர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியா அழைப்பு

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

ஆமதாபாத்,ஆக.18 - பிரிட்டனை அடுத்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவும் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் வகுப்பு கலவரம் வெடித்தது. இதனை காரணம் காட்டி நரேந்திர மோடிக்கு விசா தர அமெரிக்கா மறுத்துவிட்டது. அமெரிக்க விசா கிடைக்க பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. 

இந்தநிலையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்ற வருமாறு பிரீட்டீஷ் எம்.பி.க்கள் 2 பேர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தனர். இதற்கு அந்த இரண்டு எம்.பி.க்களுக்கும் மோடி நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்தநிலையில் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவும் அழைப்பு விடுத்துள்ளது. புதுடெல்லியில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஹைகமிஷனர் பேட்ரிக் சக்லிங் காந்தி நகருக்கு சென்று முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு மோடிக்கு சக்லிங் அழைப்பு விடுத்தார் என்று குஜராத் அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வெளியுறவுக்கொள்கையில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இருநாடுகளிடையே சுமூகமான உறவு நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக குஜராத் மாநில வளர்ச்சி தொடர்பான உறவும் நல்ல முறையில் இருக்கிறது என்று சக்லிங், மோடியிடம் கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள விவசாய தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட மாநாடு மற்றும் தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி சக்லிங்கிற்கு மோடி அழைப்பு விடுத்தார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: