முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தாக்குதல் பீதி: இந்திய எல்லையில் பாக். படைகள் குவிப்பா?

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே. - 9 - பாகிஸ்தானில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடிக்கலம் கொடுத்து வருகிறது. அதனால்தான் அங்கு பின்லேடன் தங்கியிருந்தான். இதே போல் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி கூறுகையில், பின்லேடன் பிரச்சினையை வைத்து இந்தியா ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்றார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 740 கி.மீ. தூரத்திற்கு எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு அதிகளவில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதே போல பனி படர்ந்த பகுதிகளான கியாச்சின் பகுதியிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனால் எல்லை பகுதியில் கடும் பதட்ட நிலை உருவாகி உள்ளது. பாகிஸ்தான் அத்துமீறினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய படைகளும் உஷாராகி வருகின்றன. இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் எல்லா நிலைகளையும் கவனித்து கொண்டுதான் வருகிறோம். தேவையான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம். எப்போதுமே இந்த பகுதியில் நாங்கள் விழிப்புடன் இருப்பது வழக்கம். எனவே நாங்கள் எந்த இக்கட்டான சூழ்நிலைக்கும் இடம் கொடுக்க மாட்டோம்.
பின்லேடனுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து வந்ததை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானை அமெரிக்கா நம்பவில்லை. எனவே அமெரிக்க படைகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அமெரிக்க படைகளை பாகிஸ்தானால் எதிர்கொள்ள முடியாது. எனவே திசை திருப்பும் முயற்சியாக இந்தியாவுடன் வம்பு இழுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் இந்திய எல்லையில் படைகளை குவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்