முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் லீக்: புனே பிஸ்டன்ஸ் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லக்னோ,19 - இந்தியன் ஓபன் பேட்மிண்டன் லீக் போட்டியில் புனே பிஸ்டன்ஸ் அணி தொடர்ந்து 2-வது வெற்றியைப் பெற்று இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி கடும் போராட்டத்திற்குப் பிறகு, மும்பை மாஸ்டர்ஸ் அணியை தோற்க டித்தது.

புனே அணி தொடர்ந்து 2 வெற்றி பெ ற்றுள்ளதன் மூலம் அதிக புள்ளிகள் பெ ற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத் தை பிடித்து உள்ளது. 

ஆட்டத்தை தீர்மானிக்கக் கூடிய 3-வது செட்டில் புனே அணி தரப்பில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் பிஷ்சர் ஜோ டி கலப்பு இரட்டையரில் அபாரமாக ஆடியது. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத் தின் முடிவில், மேற்படி ஜோடி 21 -20, 21 -13 என்ற கணக்கில் மும்பை அணியைச் சேர்ந்த பிரணவ் சோப்ரா மற்றும் சிக்கி ரெட்டி இணையை வீழ்த்தியது. 

அஸ்வினி மற்றும் பிஷ்சர் ஜோடி நெரு க்கடியான கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புனே அணிக்கு வெற்றி தேடித் தந்தது. இதனால் அந்த அணி 3 -2 என்ற கணக்கில் மும்பையை வென்றது. 

முதலாவது இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் கோலாகல மாக துவங்கியது. தற்போது லக்னோ வில் நடந்துவருகிறது. 

ஐ.பி.எல்.  போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதி த்து உள்ளனர். இது விறுவிறுப்பாக செ ன்று கொண்டு இருக்கிறது. 

இதில் பங்கேற்று வரும் உலகின் தலை சிறந்த வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் அபாரமாக ஆடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். 

முன்னதாக நடந்த 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2-2 என்ற கணக்கில் இருந்ததால் ஆட்டம் சம னானது. பின்பு பொன்னப்பா மற்றும் பிஷ்சர் ஜோடி நன்கு ஆடி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. 

முதல் ஆட்டத்தில் மும்பை அணி நல்ல துவக்கத்தை அளித்தது. அந்த அணி தர ப்பில் ரஷ்ய வீரர் விளாடிமிர் இவா னோவ் சிறப்பாக ஆடினார். 

இந்த ஆட்டத்தில் அவர் 21 -16, 21 -14 என்ற கணக்கில் புனே அணியைச் சேர்ந்த செளரப் வெர்மாவை தோற்கடி த்தார். 

அடுத்து நடந்த 2-வது ஆட்டத்தில் புனே அணியைச் சேர்ந்த ஜூலியன் ஷெங்க் மற்றும் மும்பையைச் சேர்ந்த டினே பான் இருவரும் மோதினர். இதில் உல க நம்பர் - 3 வீரரான ஷெங்க் 11 -21, 21 -10, 11 -7 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 

பின்பு நடந்த 3-வது ஆட்டத்தில் மும் பையைச் சேர்ந்த விளாடிமிர் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 

இந்த இரட்டையர் பிரிவில் விளாடிமிர் மற்றும் பிரணவ் சோப்ரா ஜோடி 21 -12, 20 -21, 11 -9 என்ற கணக்கில் ரூபேஷ் குமார் மற்றும் சனாவே தாமஸ் இணையை தோற்கடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்