பத்திரிகையாளர் பலாத்காரம்: அறிக்கை கோருகிறது மத்தியரசு

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.24 - மும்பையில் பெண் புகைப்பட  பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை அனுப்புமாறு மகாராஷ்டிர மாநில போலீசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுபோல் மும்பையில் ஒரு ஆங்கில பத்திரிகையில் புகைப்படக்காரராக பணிபுரியும் 23 வயது பெண் ஒருவரை நேற்றுமுன்தினம் 5 பேர் கொண்ட கும்பலானது பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டது. அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மற்ற 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களையும் கைது செய்ய இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. 

இந்தநிலையில் பெண்புகைப்படக்காரர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை அனுப்பும்படி மகாராஷ்டிர மாநில போலீசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்று பாராளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார். இந்த பாலியல் பலாத்கார சம்பவமானது மிகவும் மோசமான கொடூரமானது, துரதிர்ஷ்டவசமானது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில காவல்துறையிடம் விளக்கமான அறிக்கை கோரப்பட்டுள்ளது என்று சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். மும்பையில் நடந்த சம்பவமானது அந்த மாநிலத்தின் பிரச்சினையாகும். அப்படி இருந்தும் மும்பை போலீஸ் கமிஷனரிடம் இந்த சம்பவம் தொடர்பாக பேசினேன். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் துப்பு துலங்கியுள்ளது என்றும் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். இந்த பாலியல் பலாத்காரம் தொடர்பாக மும்பை போலீசிடம் இருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங்கும் தெரிவித்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் சிங் மேலும் கூறினார். 

மத்திய மும்பையில் உள்ள பாரெல் பகுதியில் நேற்றுமுன்தினம் பெண் புகைப்படக்காரர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கீழ் பரெலில் உள்ள சக்தி மில்ஸ் அருகே நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு அந்த பெண் ஒரு கட்டுரை எழுதிக்கொண்டியிருந்தபோது இந்த பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் போன்று மும்பை சம்பவம் நடந்துள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான அந்த பெண் புகைப்படக்காரின் நண்பரை கட்டிப்போட்டுவிட்டு பெண்ணை கற்பழித்து உள்ளனர். சக்தி மில்ஸ் வளாகத்தில் 5 ரவுடிகள் இருந்தனர். அவர்கள் என்னிடம் முதலில் தகாத வார்த்தைகளை கூறி தொந்தரவு கொடுக்கத்தொடங்கினர். அப்போது என் நண்பர் தடுத்தபோது அவரை அந்த ரவுடிகளில் 2 பேர் அடித்து தாக்கினர் மற்ற 3 பேர் அருகில் உள்ள ஒரு பாலடைந்த கட்டிடத்திற்கு என்னை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை படுத்தினர் என்று அந்த பெண் பத்திரிகையாளர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: