ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் போலீஸ் கற்பழிப்பு

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

ராஞ்சி, ஆக.25  - ஜார்கண்ட் மாநிலத்தில்,லதேதர் மாவட்டத்தில் பெண் போலீஸ் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது தொடர்பாக 4 பேரிடம் போலீஸார் விசரரணை நடத்தி வருகிறார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மிக்கேல் ராஜ் கூறினார். பெண் போலீஸ்  தனது பெற்றோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் இவரது காரை வழிமறித்து, காரிலிருந்த இவரை இழுத்துச் சென்று  கற்பழித்துள்ளனர். இவரை கற்பழித்தவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள். இவர்களில் 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மாவோயிஸ்ட் வன்முறைக் கும்பலால் இவரது கணவர் கொல்லப்பட்டார். இதையடுத்து கருணை அடிப்படையில் இவருக்கு பெண் போலீஸ் பதவி வழங்கப்பட்டது.      

இதுபோன்ற வெட்கக்கேடான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறோம். விரைவில் இதில் தொடர்புடையவர்களை கைது செய்வோம் என்றும் மைக்கேல்ராஜ் கூறினார்.   

லதேகர் டவுணிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள  நெடுஞ்சாலை யில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். கடந்த ஜூன் மாதம் இந்தப் பகுதியில் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: