முக்கிய செய்திகள்

வருமான வரி தாக்கல் விலக்கு - 85 லட்சம் பேர் பயனடைவர்

Income-Tax

 

புது டெல்லி,மே.10 - மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதை அடுத்து 85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நாடாளுமன்றத்தின் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள் வருமான வரித்துறையிடம் கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த புதிய முறை வரும் ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது. 

ஆனால் மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள் டிவிடென்ட் வட்டி உள்ளிட்ட இதர விவரங்களை அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். இப்புதிய முறை மூலம் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: