முக்கிய செய்திகள்

பக்தர்கள் வழிபட பத்ரிநாத் கோயில் மீண்டும் திறப்பு

திங்கட்கிழமை, 9 மே 2011      ஆன்மிகம்
badrinath-temple

டேராடூன்,மே.10 - பக்தர்கள் வழிபட வசதியாக பத்ரிநாத் கோயில் 6 மாதங்களுக்கு பின்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இமயமலையில் அமர்நாத் சிவன் குகைக்கோயில், கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய கீர்த்தி வாய்ந்த இந்து கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அனைத்தும் இமயமலைப்பகுதியில் இருக்கின்றன. இங்கு வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருவார்கள். அமர்நாத் சிவன்கோயிலுக்கு செல்பவர்களின் பெயர்கள் பதிவு செய்யும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதனையடுத்து கேதர்நாத் கோயில் திறக்கப்பட்டது. இந்த கோயில் திறக்கப்பட்டு இரண்டு நாட்களில் பத்ரிநாத் கோயில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று காலை சரியாக 5.35 மணிக்கு வேதங்களும் ஸ்லோகங்களும் முழங்க தலைமை பூசாரி ரவால் கேசவ நம்பூதிரி கடவுள் விஷ்ணு சிலையை சிரம் தாழ்த்தி தூக்கிக்கொண்டு கற்பகிரகத்திற்குள் கொண்டு சென்று வைத்தார். கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 133 மீட்டர் தூரத்தில் இந்த கோயில் உள்ளது. கோயில் நடை திறப்பு விழாவில் மாநில முக்கிய அமைச்சர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: