முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவனத்தில் விஷம்? ஆசிரமத்தில் 10 பசுக்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

கோபால்கர், செப். 3  - உ.பி. மாநிலம் மதுரா நகரில் உள்ள கோபால்கர் பகுதியில் ஒரு ஆசிரமத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 பசு மாடுகள் திடீரென இறந்தன. கோபால்கர் பகுதியில் அகந்தானந்த் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் நேற்று பசு மாடுகளுக்குத் தீவனம் போடப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 12 மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து பிற மாடுகளும் பாதிக்கப்பட்டன. இதில் 10 மாடுகள் பரிதாபமாக இறந்து போயின. அந்த மாடுகள் உண்ட தீவனம் விஷமாகிவிட்டதன் காரணமாக இந்த பசு மாடுகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 24 மாடுகள் உடல் நலம் குன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிற மாடுகளை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆசிரமத்தில் இருந்த பசுக்கள் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்