முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் மளிகைக்கடை நடத்திய சீக்கியர்கள் கொலை

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2013      வர்த்தகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப்.8 - அமெரிக்காவில் மளிகைக் கடை நடத்திய சீக்கியரையும், ஊழியரையும், மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட் டனர். சீக்கியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் பீதி ஏற்பட்டுள்ளது.  பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில்  உள்ள பிரீத் நகரைச் சேர்ந்தவர் ஜக்தார்சிங். வடக்கு இண்டியானா பகுதியில் எல்காட் என்ற இடத்தில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரிடம் பஞ்சாப் மாநிலம் ஹோசியாப்பூர் அருகே உள்ள முனான் கிராமத்தை சேர்ந்த பவன் பிரீத் சிங் என்பவர் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் வழக்கம்போல் கடையில் இருந்தனர், அப்போது முகமூடி அணிந்து வந்த 2 பேர் திடீரென மளிகைக் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த ஜக்தார்சிங், பவன் பிரீத் சிங் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி விட்டனர்.   

இதற்கு பஞ்சாபி சங்க தலைவர் சத்நாம்சிங் சாகல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜக்தார்சிங் அப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக கடை வைத்துள்ளார். கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு கடைக்குள் புகுந்த அவர்கள் 2 பேரும், இரக்கமின்றி சுட்டதில் ஜக்தார்சிங், பவன் பிரீத் சிங் ஆகியோர் இறந்தனர். இதுபற்றி பக்கத்து கடைக்காரர் பில்சிங்லெய்ர் என்பவர் கூறுகையில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டு நான் வெளியே வந்தேன். அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர் என்றார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி எல்காட் பகுதியை சேர்ந்த கெவின் மூர் என்ற இளைஞரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago