முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறைப்படி அழைத்தால் விசாரணைக்கு பிரதமர் ஆஜராவார்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.9 - ரூ.1.80 லட்சம் கோடி நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முறைப்படி அழைத்தால் விசாரணைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆஜராவார் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் பதவிக்காலத்தில் இந்தியாவை மட்டுமல்லாது உலகமே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இரண்டு மெகா ஊழல்கள் நடந்துள்ளன. ஒன்று ரூ.1.70 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றொன்று ரூ.1.80 லட்சம் கோடி நிலக்கரி சுரங்க ஊழலாகும். மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசாவிடம் தொலை தொடர்புத்துறை இருந்தது. அப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்தது. ஆனால் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்குவதில் ஊழல் நடந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்குதான் நிலக்கரி சுரங்கத்துறையும் வகித்து வந்தார். அதனால் அவர் இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் கடந்த பல நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பு நடந்த பாராளுமன்ற கூட்டமே ஸ்தம்பித்தது. நிலக்கரி சுரங்க ஊழல் குறித்து சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. முன்பு பிரதமர் மன்மோகன் சிங் ஆஜராகி விசாரணைக்கு உட்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சி.பி.ஐ. விசாரணையின்போது நிலக்கரி சுரங்க உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக பல தஸ்தாவேஜூகளை காணவில்லை. இதுகுறித்தும் சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முறைப்படி அழைத்தால் அதன் முன்பு பிரதமர் மன்மோகன் சிங் ஆஜராக தயார் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார். சி.என்.என்.,ஐ.பி.என்னின் கரன்தாபர் நிகழ்ச்சிக்கு அமைச்சர் கமல்நாத் பேட்டி அளித்தார். அப்போது நிலக்கரி சுரங் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முன்பு பிரதமர் மன்மோகன் சிங் ஆஜராவாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல்நாத், சட்டப்படி சி.பி.ஐ. யாரையும் விசாரணை நடத்தலாம். சட்டத்திற்கு பிரதமரும் உட்பட்டவர். அதனால் சட்டப்படியும் முறைப்படியும் ஆஜராகும்படி பிரதமரை சி.பி.ஐ. அழைத்தால் அவர் விசாரணைக்கு ஆஜராகுவார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்