முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவை கொல்ல பிரபாகரன் உத்தரவிட்டார்: பத்மநாதன் தகவல்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

கொழும்பு, செப்.15 - இந்தியா தன்னைக் கொன்றுவிடும் என்று கருதியதால், ராஜீவை கொல்ல பிரபாகரன் உத்தரவிட்டார் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பிரிவு தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவு தலைவராக இருந்தவர்  குமரன் பத்மநாதன். கே.பி. என்று அழைக்கப்படும் இவர்  போர் முடிந்த மூன்றாவது மாதம் மலேசியாவில் கைது செய்யப்பட்டார். தி ஆஸ்திரேலியன் என்ற பத்கிரிகைக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:

இந்தியா தன்னை கொன்றுவிடும் என்று பிரபாகரன் கருதினார். எனவே அதற்கு முன்னதாக ராஜீவ் காந்தியை கொன்றுவிட வேண்டும் என்று பிரபாகரன் முடிவு செய்தார். பயங்கரவாதத் தாக்குதலுக்கு மனிதர்களை வெடிகுண்டாகப் பயன்படுத்தும் யோசனை பிரபாகரன் மூளையில்  உதித்ததுதான். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய  காமிகஸே தற்கொலை தாக்குதலைப் பற்றி பேசியபோது, மனித வெடிகுண்டுகளை பயன்படுத்தலாம் என்று பிரபாகரன் யோசனை கூறினார்.

அதுமட்டுமல்லாமல்பொது நோக்கத்துக்காக தமிழ்நாட்டில் தீக்குளிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே இலங்கை இறுதிப் போரின்போது  அமெரிக்காவின் கப்பற்படை எங்களுக்கு முக்கிய தகவல்களை தந்து உதவியது என்று தி ஆஸ்திரேலியன் பத்திரிகைக்கு இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராயபட்சே தெரிவித்தார். 

2006 முதல் 2008 வரை ஆயுதங்களை ஏற்றி வந்த விடுதலைப்புலிகளின் 12 கப்பல்கள் பற்றிய தகவல்களை தனது செயற்கைகோள் தொழில்நுட்பத்தைக் கொண்டு அமெரிக்கா வழங்கியதால் அவற்றை தாக்கி அழிக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்