நகரி, மே.12 - ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. மீது ஆதிவாசி பெண்கள் சாணத்தை எடுத்து சரமாரியாக வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் அரக்குலோயா தொகுதி தெலுங்கு தேச எம்.எல்.ஏ. விவேரிசோமா களிமண் எடுக்கும் நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டார். இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த களிமண்ணால் ஜாடி செய்யும் ஆதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் எம்.எல்.ஏ. விவேரிசோமா அவர்களை சமாதானப்படுத்த வந்தார். ஏற்கனவே அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ஆதிவாசி பெண்கள் சாணத்தை எடுத்து அவர் மீது வீசினர். இதை சற்றும் எதிர்பாராத எம்.எல்.ஏ. தனது பாதுகாவலர்களுடன் ஓட்டம் பிடித்தார். அங்கிருந்த மக்கள் ஒட்டம்பிடித்த எம்.எல்.ஏ., வை விடாமல் பின்தொடர்ந்து கட்டை கம்புகளுடன் துரத்தி தாக்கினர். அவரது காரையும் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து ஆதிவாசி பெண்கள் கூறும்போது, விவேரி சோமா ஒரு ஊழல் பேர்வழி. நாங்கள் வாழும் இடத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்க முயன்று வருகிறார். அவர் மீண்டும் இங்கு வந்தால் அவரை வெட்டி கொன்றுவிடுவோம் ஆவேசமாக கூறினர்.
- குன்றக்குடி தங்க விமானம்.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம். இரவு தங்கத்தேரில் பவனி.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்தப்பல்லக்கு, மாலை தங்கக்குதிரை வாகனத்தில் பவனி.
- திருச்சேறை நாரநாதர் இராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.