இந்த வார இறுதியில் கேஸ் விலை உயரும்

Gas price

 

புது டெல்லி,மே.12 - சமையல் எரிவாயு சிலிண்டர்(எல்.பி.ஜி.), டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வை இந்த வார இறுதியில் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு கூடி விலை உயர்வு குறித்து விவாதிக்க இருந்தது. அந்த கூட்டம் தள்ளிப் போடப்பட்டதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார். இந்த குழுவில் மேலும் சில அமைச்சர்களை சேர்த்து கொள்வதற்காக கூட்டம் ஒத்தி போடப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 அல்லது ரூ. 4 வரை உயர்த்துவது எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 20 முதல் ரூ. 25 வரை உயர்த்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. கடைசியாக ஜனவரியில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டாம் என பெட்ரோலிய நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்து விட்டதால் பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்தினால் லிட்டருக்கு ரூ. 8.50 உயர்த்தும் என தெரிகிறது. முழு சுமையையும் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்துவதா அல்லது படிப்படியாக உயர்த்துவதா என்பது குறித்து அரசு ஆலோசனைப்படி நிறுவனங்கள் செயல்படும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ