முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவிலும் மின்வெட்டு - மின்வாரிய அலுவலகம் முற்றுகை

வியாழக்கிழமை, 12 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.12 - சென்னையில் பகலில் ஒரு மணிநேரம் மட்டுமே பவர் கட் என்று அறிவித்துவிட்டு, தற்போது இரவிலும் மின்சாரத்தை வெட்டி, தி.மு.க. அரசு பொதுமக்களுக்கு வேதனையை பரிசாக தந்துள்ளது. இதுகுறித்து விபரம் வருமாறு:-

சென்னையில் அக்னி வெயில் வாட்டி வதைக்கிறது. லேசாக வீசும் காற்றும் அனலை அள்ளி இறைக்கிறது. அன்றாட பணிகளுக்காக வெளியே செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடி வெப்பத்தை தாங்க முடியாமல் தவிக்கிறார்கள். பகலில் கடுமையான வெயில் கொளுத்துவதால் இரவிலும் வீடுகளில் வெப்பம் தாக்குகிறது. மின் விசிறி, ஏ.சி. இருந்தாலும் மின் தடை காரணமாக இயக்க முடியவில்லை. வெயிலுடன் சேர்ந்து மின் வாரியமும் சென்னை வாசிகளை போட்டு தாக்குகிறது. மின் பற்றாக்குறை காரணமாக சென்னையில் ஒரு மணி நேரம் மின் வெட்டை மின் வாரியம் அறிவித்தது. இப்போது அந்த அறிவிப்பெல்லாம் காற்றோடு போய்விட்டது. எப்போது மின்சாரம் வரும்? எப்போது போகும்? என்று சொல்ல முடியாது. பகலில் மின் வாரிய அறிவிப்புபடி ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது.இரவில் அதிகமாக மின் தடை ஏற்படுகிறது. பகலில் வெயிலில் தவிப்பவர்கள் இரவிலாவது சற்று நிம்மதியாக தூங்கலாம் என்று மின் விசிறி அல்லது ஏ.சி.யில் தூங்குகிறார்கள். ஆனால் இரவில் திடீரென்று மின் தடை ஏற்படுகிறது. அதன் பிறகு குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் கழித்துதான் மின்சாரம் வருகிறது. இதனால் இரவிலும் சென்னை வாசிகள் தூக்கத்தை தொலைத்து வருகிறார்கள். தூங்க முடியாமல் குடும்பத்துடன் தெருக்களில் பரிதாபமாக அமர்ந்து இருக்கிறார்கள். நேற்று இரவு புரசைவாக்கம், வியாசர்பாடி, பி.பி.ரோடு, எம்.கே.பி. நகர், பி.வி.காலனி, பெரம்nullர், கொடுங்கையூர், மூலக் கடை, கொளத்தூர், போரூர், கார மங்கலம் ஆகிய பகுதிகளில் அதிகாலை 3 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. பின்னர் காலை 9 மணிக்கு தான் வந்தது. இதற்கிடையில் பராமரிப்பு பணி என்று காரணம் காட்டி அடிக்கடி பல இடங்களில் பகல் முழுவதும் மின் தடை செய்கிறார்கள். நாளை புரசைவாக்கம், ஓட்டேரி, அண்ணாநகர், கிண்டி, மயிலாப்nullர் பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப் பட்டுள்ளது.   அதிகமான ஏ.சி. புழக்கத் தால் கோடையில் மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. லோடு தாங்காமல் டிரான்ஸ் பாரம் எரிந்து விடுகிறது என்று பல காரணங்களை மின் வாரியம் தெரிவிக்கிறது. வழக்கமாக ஆண்டு தோறும் கோடை காலத்தில் கேட்டு கேட்டு பழகிப்போன சமாளிப்புதான் இது. கோடை வெப்பத்தில் தப்பிக்க புதிதாக ஏ.சி. பொருத்துபவர்கள், மின் விசிறியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது தவிர்க்க முடியாது. மின் தேவைக்கு ஏற்ப கோடை காலத்தை கருத்தில் கொண்டு முன்னேற்பாடு செய்ய வேண்டியது மின் வாரியத்தின் கடமை. வரும் காலங்களிலாவது இது போன்ற நடவடிக்கைகளை மின்வாரியம் எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பு. தொடர்ந்து இரவிலும் மின் வெட்டில் அவதிப்படும் பொது மக்கள் நேற்று இரவு ஆவேசத்தில் எம்.கே. பி. நகர் பகுதியில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்து மின்வாரிய அதிகாரி அளித்த விளக்கம் வருமாறு:​ பேசின்பிரிட்ஜ் ஜி.எம். ஆர். பகுதியில் இருந்து வட சென்னை பகுதிக்கு மின் சப்ளை செய்யப்படும் அதிகாலை 3 மணியளவில் அங்கிருந்து மின் வினியோகம் தடைபட்டது. திடீரென சப்ளை துண்டிக்கப்பட்டதில் இந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. அதை சரி செய்யும் பணி விடிய விடிய நடந்தது. காலை 9 மணிக்கு தான் சரி செய்யப்பட்டு மின் வினியோகம் சீரானது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony