முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவிக்கு பயந்து புகை பழக்கத்தை கைவிட்ட ஒபாமா

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், செப். 26 - தனது மனைவிக்கு பயந்து புகைப் பழக்கத்தை கைவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சிவில் சொசைட்டி வட்ட மேஜை மாநாட்டில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது ஐ.நா. சபை அதிகாரி மைனாகியை ஒபாமாவிடம் உங்களுக்கு புகை பழக்கம் உள்ளதா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த ஒபாமா, நான் எனது மனைவிக்கு பயந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டேன் என்றார். 

கடந்த 2009 ம் ஆண்டில் அவர் அளித்த பேட்டியில் புகை பழக்கத்தை முழுமையாக விட முயற்சிக்கிறேன். மிகவும் குழப்பமான சூழ்நிலையில் என்னால் சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியவில்லை. எனினும் எனது குழந்தைகள், குடும்பத்தினர் முன்னிலையில் புகை பிடிப்பதில்லை. நான் 95 சதவீதம் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு விட்டேன் என்று தெரிவித்தார். 2012 ம் ஆண்டு ஒபாமாவின் மனைவி மிசெல் அளித்த பேட்டி ஒன்றில், எனது கணவர் வெற்றிகரமாக புகை பழக்கத்தில் இருந்து விடுபட்டு விட்டார். இதற்கு தங்கள் மகள்கள்தான் முக்கிய காரணம் என்று பெருமிதத்துடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்