Idhayam Matrimony

ஆப்கானில் அதிபர் கர்சாயுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      இந்தியா
Image Unavailable

காபூல்,மே.13 - ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இரண்டு நாட்கள் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காபூல் நகரில் அதிபர் கர்சாயை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  போரில் சீரழிந்துபோன ஆப்கானிஸ்தானில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் இருந்து டாக்டர்கள், குழு குழுவாக சென்று சுகாதார பணிகளை செய்து வருகின்றனர். ஏராளமான பொறியாளர்களும் சென்று கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்தியர்களின் சேவையை ஐரோப்பா நாடுகள் மட்டுமல்லாது ஆப்கானிஸ்தான் மக்களும் பாராட்டி வருகிறார்கள். இதைத்தவிர ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொடுத்து உதவி செய்து வருகிறது. இதை பாகிஸ்தான் மற்றும் தலிபான் தீவிரவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தியர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் பின்லேடன் சுட்டுக்கொலைசெய்யப்பட்டிருப்பதால் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு தலிபான்களால் ஆபத்து அதிகரித்துள்ளது. அதனால் இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பாகவும் அங்கு மேலும் தொழில்களை தொடங்குவது குறித்து பேசுவதற்காகவும் பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்றுக்காலையில் டெல்லியில் இருந்து காபூல் சென்றடைந்தார். காபூலில் பிரதமர் மன்மோகன் சிங்கை அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மாய் ரசூல், பாதுகாப்பு மந்திரிஅப்துல் ரகுமான் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர். சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் ஆப்கன் அதிபர் கர்சாயை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவி செய்வது, ஆப்கானில் இந்தியா தொழில்கள் தொடங்குவது, ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ்,சிறப்பு தூதர் சதிந்தர் லம்பர் மற்றும் உயரதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago