முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நெருக்கடியை தீர்க்க ஒபாமா தீவிரம்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக். 12 - அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் அரசு துறைகள் முடங்கியிருப்பதை தீர்க்க அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் தொடர்ந்து 9 வது நாளாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்க்க ஒபாமா தனது ஜனநாயக கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறும் போது, குடியரசு கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நெருக்கடியை தீர்க்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜே கார்னி கூறுகையில், அமெரிக்க நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஜான் ஜோனர் குடியரசு கட்சி உறுப்பினர்களை வெள்ளை மாளிகைக்கு வர விடாமல் தடுக்கிறார். அதனால் அதிபர் ஒபாமா மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அமெரிக்க பொருளாதார நெருக்கடி குறித்து நேரில் விளக்க ஒபாமா முடிவு செய்துள்ளார். குடியரசு கட்சியினர் நெருக்கடியை தீர்க்க முன்வராவிட்டால் அமெரிக்க மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க தொலைக்காட்சியில் ஒபாமா அளித்த பேட்டியில், அரசு துறைகள் முடக்கத்திற்கு குடியரசு கட்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்