ரஸ்யாவில் பஸ்சில் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல்

மாஸ்கோ,அக்.23 - டவுன் பஸ் மீது பின் தொடர்ந்து சென்று தாக்குதல் நடத்திய பெண் தற்கொலை படை தீவிரவாதி தானும் உயிரிழந்தார்.
ரஸ்யாவில் இருந்து செசன்யாவை தனியாக பிரித்து தர வலியுறுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வோல்கா குராட் என்ற இடத்தில் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
வோல்கா குராட் நகரில் ரோட்டில் டவுன்பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை ஒருபெண் வாகனத்தில் தொடர்ந்து சென்று மோதினார். அப்போது ததனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தாள். இதில் பஸ் வெடித்து சிதறியது. 40 பேர் சென்ற பஸ்சில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணும் உடல் சிதறி பலியானாள். அவர் செசன்யா தீவிரவாதி என போலீசார் தெரிவித்தனர். வடக்கு காகசில் உள்ள தஜஸ்தானை சேர்ந்தவர் என்றும் அவளது பெயர் நய்டா அசியலோவா(30) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.