முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தி பயன்படுத்திய கைராட்டை ஏலத்தில் விட முடிவு

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.23 - மகாத்மாகாந்தி பயன்படுத்திய கைராட்டை ரூ.80 லட்சத்துக்கு ஏலம் விடப்பட உள்ளது. காந்தி பயன்படுத்திய 60_க்கும் மேற்பட்ட பொருள்கள் பிரிட்டனில் நவம்பர் மாதம் ஏலம் விடப்பட உள்ளன. மகாராஷ்டிரத்தில் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டபோது காந்தியே தயாரித்துப் பயன்படுத்திய நூல் நூற்கும் கைராட்டை ரூ.80 லட்சம் வரை ஏலத்தில் விற்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஏலத்தை அறிவித்துள்ள பிரிட்டனின் மேல்லக்ஸ் ஆக்க்ஷன்  நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

இந்தியாவில் கல்வியாளராகவும், தொழிலதிபரகாவும் திகழ்ந்த அமெரிக்காவைத் சேர்ந்த பிளாய்ட் ஏபபர் என்பவருக்கு சிறையில் பயன்படுத்தி வந்த கைராட்டையை காந்தி பரிசாகக் கொடுத்தார். அதற்குப் பதிலாக  ஏபபர் தானே உருவாக்கிய ஏரை காந்திக்கு வழங்கினார். இந்தியாவின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் நூல் நூற்கும் ராட்டை பெரிதாக இருந்தது. ஆகையால் எளிதாகக் கொண்டு செல்லும் வகையில் சிறையில் இருந்த காந்தி இந்த கைராட்டையை உருவாக்கினார். இந்த ராட்டையை தனித்தனியாகப் பிரித்து  எடுக்கும் வகையில் அவர் தயாரித்துள்ளார். இந்த ராட்டையை காந்தியே உருவாக்கிய காரணத்தால் அவர் பயன்படுத்திய 60_க்கும் மேற்பட்ட பொருள்களில் இது முதன்மை பெறுகிறது.

கைராட்டை ரூ. 60 லட்சம் முதல் 80 லட்சம் வரை ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  காந்தியின் அரிய புகைப்படங்கள், புத்தகங்கள், ஆவணங்கள் உள்பட 60_க்கும் மேற்பட்ட பொருள்கள் நவம்பர் 5_ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன.  இதுவரை நடைபெற்ற ஏலங்களில் அதிகத் தொகைக்கு விடப்படும் ஏலமாக இது அமையும் என்று கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்