முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லைப் பிரச்சனைக்கு தலாய்லாமா காரணம்: சீனா

புதன்கிழமை, 23 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பீகிங், அக்.24 - இந்திய எல்லைப் பிரச்சனைக்கு தலாய்லாமாதான் காரணம் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. திபெத் துறவியான தலாய்லாலா அந்நாட்டின் விடுதலைக்குப் போராடினார். இதையடுத்து 1959_ம் ஆண்டு தலாய்லாமாவை சீன ராணுவம் கைது செய்ய முயன்றது. அவர்களின் பிடியில் சிக்காமல்         அவர் தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதுமுதல் அவர் இந்தியாவிலேயே வசித்து வருகிறார்.

   இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் சீனா சென்றார். அவர் சீனா சென்றுள்ளதை  அடுத்து சீனா ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது.  அதில் இந்திய எல்லைப் பிரச்சனைக்கு தலாய்லாமாவும், அவரது ஆதரவாளர்களும், அங்கிருந்தவாறே சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அவர்களே காரணம். திபெத்தில் தற்போதுள்ள கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்பதே தலாய்லாமாவின் நோக்கம்.

  திபெத்தின் வளர்ச்சிக்காக சீன அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு 94 சதவீத திபெத்தியர்கள் ஆதரவு தருகின்றனர். ஆனால் இதை சீர்குலைக்க தலாய் லாமா முயற்சி செய்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங், சீன அதிபரை சந்கிக்கும்போது தலாய்லாமாவை நாடு கடத்தும்படி சீன அதிபர் வேண்டுகோள் விடுப்பார் என்று கருதப்படுகிறது.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்