முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு அம்மாளிடம் இன்று விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

சென்னை, அக்.28 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் நிலையில் அவரது உடல்நிலை சீராக இல்லை. எனவே அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தயாளு அம்மாளின் மகள் செல்வி மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தயாளு அம்மாள் உடல்நிலையை பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவகுழுவை அனுப்பி வைத்தனர். அந்த குழுவினர் தயாளு அம்மாள் உடல் நிலையை பரிசோதித்து விட்டு டெல்லிக்கு பயணம் செய்யும் நிலையில் அவரது உடல் நிலை தகுதியாக இல்லை என்று அறிக்கை அளித்தது.

இதையடுத்து எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி தயாளு அம்மாள் வீட்டிற்கு நேரடியாக சென்று சாட்சியத்தை பதிவு செய்யும்படி சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி.சைனி கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்களும் எழும்பூர் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு சாட்சியம் பதிவு செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இன்று காலையில் எழும்பூர் நீதிபதி தயாளு அம்மாள் வீட்டுக்கு செல்கிறார். அங்கு அவரது சாட்சியம் பதிவு செய்யப்படுகிறது.

இந்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டுள்ள அ.ராசா சார்பில் அவரது வக்கீல், கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. முன்னாள் இயக்குனர் சரத்குமார், கரீம்மொரானி, ஆசிப்பல்வா ஆகியோரும் நேரில் ஆஜராகிறார்கள்.

சாகித்பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா உள்பட 12 பேருக்கு சென்னைக்கு வந்து ஆஜராவதில் இருந்து சி.பி.ஐ. நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்