முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. விலிருந்து வாஜ்பாய் மருமகள் விலகல்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.29 - பா.ஜ.க.விலிருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மருமகளும்  முன்னாள் எம்.பி. யுமான கருணா சுக்லா விலகுவதாக அறிவித்தார். மாநிலத்தலைவர்கள் தன்னை அலட்சியப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறுகையில் பா.ஜ.க. விலிருந்து வாஜ்பாய் மருமகள் கருணாசுக்லா வெளியேறியிருக்கிறார். இது அக்கட்சியில் வாரஜ்பாய் சகாப்தம் முடிவடைந்து விட்டதேயே காண்பிக்கிறது. பா.ஜ.க. வில் இப்போது இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதயையே இது குறிக்கிறது. முன்னாள் உள்துறை அமைச்சர் வல்லபாய்படேலின் இறுதிச்சடங்கில் அன்றைய பிரதமர் நேரு கலந்துகொள்ளவில்லை என் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் கூறியிருந்ததையு ம் அவர் கண்டித்தார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தன் சுயசரிதையில் படேலின் இறுதிச்சடங்கில் நேருவும், ராஜேந்திர பிரசாத்தும் பங்கேற்றது குறித்து எழுதியுள்ளார். என்வே தவறான தகவல் கூறியதற்காக மோடி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். பாட்னாவில் மோடி கலந்து கொண்ட பேரணி நடைபெற்ற இடத்தில் குண்டு வெடித்தது குறித்து கேட்டபோது இதில் தொடர்புடைய குற்றவாளிகளை நிதீஷ் அரசு கண்டு பிடிக்க வேண்டும் என திக்விஜயசிங் கேட்டுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்