முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியால் இந்தியாவை திறம்பட வழி நடத்திச் செல்ல இயலாது

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், அக்.29 - குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியால் இந்தியாவை திறம்பட வழி நடத்திச் செல்ல இயலாது என்று அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது. 

இதற்குக் காரணம் அவர் இந்தியர்களிடையே அச்சத்தையும், விரோதத்தையும் ஏற்படுத்தி யுள்ளார் என்று அந்தப் பத்திரிகையின்  ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது.அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இதுதவிர எதிர்க்கட்சிகளையும், அதிருப்தியாளர்களையும் சமாளித்துப் பணியாற்றும் திறன் மோடியிடம் கிடையாது. பாஜகவுடனான 17 ஆண்டு கால உறவை ஐக்கிய ஜனதாதளம் முறித்துக்கொண்டதன் மூலம் ஏற்கெனவே மோடி தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். பிரதமர் பகவிக்கு மோடி பொருத்தமற்றவர் என்பதாலேயே அந்த கட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது. 

இந்தியாவில் பல்வேறு மதத்தினர் உள்ளனர். இந்நிலையில்  பெரும்பாலான மக்கலிடையே அச்ச உணர்வை அவர் ஏற்படுத்திவிட்டார். அவரால் இந்தியாவை திறன்பட வழிநடத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர்களாகிய  எங்களுக்கு இல்லை. குஜராத் மாநிலத்தின் பொருளாதார நிலை பாராட்டும் வகையில் இல்லை. அங்கு வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் விகிதம் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களை விட குறைவாகவே இருப்பினும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம்களை விட அந்த மாநில முஸ்லிம்கள் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். 

மோடி ஆட்சிக்கு வந்தால் பெரும்பாலான இந்தியர்களுக்கு குறிப்பாக 1.38 கோடி முஸ்லிம்களுக்கும், பிற சிறுபான்மையினருக்கும் பிரச்சனையே என்று அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்