முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதான எதிர்க்கட்சி தே.மு.தி.க.

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,மே.15 - தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 27 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள தே.மு.தி.க. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெறுகிறது. 13 வது சட்டப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்தது. அந்த இடத்தை இப்போது தே.மு.தி.க. பிடித்துள்ளது. அ.தி.மு.க. அணியில் இடம் பெற்ற தே.மு.தி.க 41 இடங்களில் போட்டியிட்டது. அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 27 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பேரவையில் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வேண்டுமென்றால் சில விதிகள் உள்ளன. ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பெற்று இருக்க வேண்டும். பேரவை கூட்டம் நடைபெற வேண்டும் என்றால் மொத்த உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதாவது 24 உறுப்பினர்கள் இருப்பது அவசியம். 

ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வேண்டுமென்றால் அந்த 24 எம்.எல்.ஏக்கள் ஒரு கட்சிக்கு வேண்டும். எதிர்க்கட்சியாக வேண்டுமென்றால் இந்த இரண்டு முக்கிய விதிகள் உள்ளதாக சட்டப் பேரவை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இரு விதிகளையும் தே.மு.தி.க பூர்த்தி செய்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் கேபினட் அமைச்சருக்கு உரிய அந்தஸ்தை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்